/* */

நெல்லையில் களைகட்டிய உள்ளாட்சி தேர்தல்: இரவிலும் வேட்பாளர்கள் பிரசாரம்

மானூர் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், இரவிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

நெல்லையில் களைகட்டிய உள்ளாட்சி தேர்தல்: இரவிலும் வேட்பாளர்கள் பிரசாரம்
X

நெல்லையில், வேட்பாளர் ஆனந்தி கனிதுரை, நிர்மலா ராஜா ஆகியோர் கூட்டாக பிரசாரம் மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அங்குள்ள 1வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தி கனிதுரையும், மானூர் ஒன்றியம் 1 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் நிர்மலா ராஜா என்ற மாடசாமி ஆகியோர், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்தே வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வெங்கடாசலபுரம், மடத்துபட்டி, பெருமாள்பட்டி, புளியங்குளம், வடக்கு பூலாங்குளம், தெற்கு பூலங்குலம் உட்பட பல்வேறு கிராமங்களில், வீடுவீடாக சென்று மக்களிடம் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர். குறிப்பாக, பலரும் வேலைக்கு சென்று வீட்டில் இருப்பார்கள் என்பதால், இரவிலும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது, அதிமுக கிளைச் செயலாளர்கள் தங்கராஜ், அல்லிராஜா, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர், உடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்