/* */

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஒரு வருடம் முன்பு காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை குணமான நிலையில் பெற்றோரிடம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்

HIGHLIGHTS

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் பெற்றோரிடம் ஒப்படைப்பு
X

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பீகாரை சேர்ந்த இளைஞர்

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது டவுண் பகுதியில் மயங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்தார். அவரை மீட்டு ஆதரவற்றோர் முகாமில் தங்க வைத்து பாதுகாத்து வந்த நிலையில் எதுவும் பேசாமல் இருந்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை படி, மாநகராட்சி ஆணையர் அனுமதியுடன் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்டது.

ஒரு சில வாரங்களில் ஒருநாள் மாலை திடீர் என முஸ்லிம் முறைப்படி துவா செய்ததார். அதை தொடர்ந்து அழுததும் அங்கு இருந்தவர்களை நெகிழ வைத்தார். அதை வீடியோ எடுத்து இந்த பையனை பற்றிய விபரம் கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சென்னையில் இருந்து ஒரு பெற்றோர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் போல் உள்ளார் என தேடி நேரில் வந்து பார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தாலும் வெட்டு காயம் இல்லாததால் தங்களது மகன் இல்லை என மனமில்லாமல் அவரை விட்டுவிட்டு ஊர் சென்றனர். அதன் பிறகு அவர் பேச ஆரம்பித்த பின்னர், அவர் ஊர் பீகாரில் உள்ள டர்பங்கா என்று மட்டும் கூறினார்.

தற்போது முழுமையாக குணமான நிலையில் பீகார் மாநிலத்தில் டர்பங்கா ஆட்சியரிடம் பேசி இவரின் பெற்றோரை கண்டுபிடித்தனர். அப்போது இளைஞர் பெயர் முகமது நிசார் என்பதும், அவரது தந்தை பெயர் நூர்முகம்மது என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மகனை அழைத்து செல்ல அவரது அப்பா நூர்முகம்மது திருநெல்வேலி வந்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முறைப்படி பெற்றோருடன் குணமான பையனை பீகாருக்கு வழி அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் குறித்து காப்பக ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறும் போது, கடந்த வருடம் ஊரடங்கின் போது மனநலம் பாதிக்கப்பட்டு வீதியோரம் இருந்த இளைஞரை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்து முறையாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் கலெக்டரின் உதவியுடன் அவரது பெற்றோரை கண்டுபிடித்து முழுமையாக குணம் ஆன நிலையில் அவரது தந்தையுடன் அனுப்பி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்

இளைஞர் முஹமது நிசார் தன் தந்தையுடன் சொந்த ஊருக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இளைஞரின் தந்தை நூர் முஹம்மது தன் மகனை குணமடைந்த நிலையில் தன்னுடன் சேர்க்க உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு இறைவனுக்கு நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்வதாக தெரிவித்தார்.

ஊரடங்கு காலத்தில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இளைஞரை அவரது தந்தை பூரண நலத்துடன் மீண்டும் ஊருக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Jan 2022 4:15 AM GMT

Related News