அஞ்சல்துறை மூலம் மேக் தூத் அஞ்சல் அட்டையினை மேயர் வெளியீடு
Mayor issues MacDooth postcard by postal Dept
HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக அஞ்சல்துறை மூலம் மேக்தூத் அஞ்சல் அட்டையினை மேயர் பி.எம்.சரவணன் வெளியிட்டார்
திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக அஞ்சல்துறை மூலம் மேக்தூத் அஞ்சல் அட்டையினை மேயர் பி.எம்.சரவணன் வெளியிட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிவியல் பூங்கா (stem park) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மேயர் பி.எம்.சரவணன் அஞ்சல்துறை மூலம் மேக்தூத் அஞ்சல் அட்டையினை வெளியிட்டார். சுமார் ஒரு இலட்சம் மேக்தூத் அஞ்சல் அட்டைகள் ( 22-06-22) முதல் திருநெல்வேலி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 25 காசுகள் ஆகும். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி கோட்டம் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், வணிக அதிகாரிகள் ராஜேந்திரபோஸ், விநோத், அஞ்சலக மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி கலந்து கொண்டனர்.