கீழ்த்தரமான சுல்லி-டீல்ஸ் செயலி: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் புகார்

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயலியை உருவாக்கி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை- நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையரிடம் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கீழ்த்தரமான சுல்லி-டீல்ஸ் செயலி: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் புகார்
X

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையரிடம் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் புகார் 

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயலியை உருவாக்கி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் இடத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் புகார் அளித்துள்ளனர்.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நெல்லை மாவட்ட தலைவர் ஜன்னத் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் இடத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் "சமூக ஊடகத்தில் 'சுல்லி டீல்ஸ்' என்ற செயலி சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அந்த செயலியில் இஸ்லாம் மீது வெறுப்புணர்வு கொண்டுள்ள இந்துத்துவ சக்திகள் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து எடுத்து மிகவும் கீழ்த்தரமான வகையில் அந்த செயலியில் வெளியிட்டுள்ளனர். இந்துத்துவ சக்தியினரின் இந்த கேவலமான செயலை நாட்டின் அனைத்து குடிமக்களும் கண்டிக்க வேண்டும். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல். இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைய இந்த 'சுல்லி டீல்ஸ்' ஏதோ விவரம் தெரியாத சிலர்கள் செய்த காரியமல்ல. இதற்கு பின் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. முஸ்லிம் பெண்களை குறி வைத்து திட்டமிட்டு வசைபாடுவது, கீழ்த்தரமாக சித்தரிப்பது, கேலி-கிண்டல் மற்றும் ஆபாசமாக பேசுவது என்று ஒரு கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆகையால் முஸ்லிம் பெண்கள் மீது நடைபெறும் இந்த தாக்குதலுக்கு நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய கண்டங்களை பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனு அளிக்கும் போது மாவட்டச் செயலாளர் ஜெசிமா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷப்னம் அனீஸ் பாத்திமா ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 2021-08-04T07:49:33+05:30

Related News