தாெடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாெடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நெல்லையில் கடந்த ஒரு வாரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் நெல்லையில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பிற்பகல் 12 முப்பது மணி அளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

இந்நிலையில் தொடர் கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 25 Nov 2021 3:26 PM GMT

Related News