/* */

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்: நெல்லை ஆட்சியர் வெளியீடு

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரினை ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.

HIGHLIGHTS

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்: நெல்லை ஆட்சியர் வெளியீடு
X

ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தவைர் வே.விஷ்ணு இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தவைர் வே.விஷ்ணு இன்று வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் இன்று (07.05.2022) பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து ஆண்டு இதே தேதியில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளர். கடந்த ஓராண்டில் நம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் ரூ. 15 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எனவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.05 கோடி மதிப்பில் நுழைவு வாயில் அமைக்கப்படும் மற்றும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறை குறிக்கும் வகையில் ஒளி,ஒலி கண்காட்சி அமைக்கப்படும். என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். வள்ளியூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் எனவும், ரூ.5 கோடி மதிப்பில் கலர் மீன்கள் வளர்ப்பு, கண்காட்சி அமைக்கப்படும். எனவும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2 கோடியே 11 இலட்சத்து 13ஆயிரத்து 101 மகளிர் பயணம் செய்துள்ளனர்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 53,695 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 48,264 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 3918 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாகளும், 16 நபர்களுக்கு 69.30 இலட்சம் மதிப்பில் கல்விக்கடனுதவிகளும், 24 நபர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு 61.5 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளும், 657 நபர்களுக்கு 45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன் ரத்துத்திட்டத்தின் மூலம் 33503 பயனாளிகள் 40 கிலோ கிராம் தங்க நகைக் கடன் ரூ 100.89 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 38731 -மாணவ, மாணவியர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 2293 பெண் தன்னார்வலர்கள், கல்வி கற்பிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என்ற திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ரூ.55.76 கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அரசு பொது மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கனக்கான புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று மருத்துவச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 87226 பயனாளிகளுக்கு 5 நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 1 அரசு மருத்துவமனை மற்றும் 9 தனியார் மருத்துவமனைகளில் 287 பயனாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்..இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 68740422 செலவில் 944 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நெல்லை கிராப்ட்ஸ் என்ற திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நலிவுற்ற கைவினை கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கைவிளைப்பொருட்களை நெல்லைகிராப்ட்ஸ் மூலம் விற்பனை செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெல்லை நீர்வளம் என்ற திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட குளங்கள், தாமிரபரணி நதியின் வழித்தடங்கள் ஆகியவற்றை புதுப்பிக்கவும், புத்துணர்வு ஊட்டவும் "நெல்லை நீர்வளம்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான Website தொடங்கபட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 43 நரிகுறவர்கள் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு வழங்கினார். காணி இன மக்கள் உற்பத்தி செய்யப்படும் 40 வகையான பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் இயற்கை வேளாண் சான்றிதழ் (TN Organic Certifiction) பெறப்பட்டுள்ளது. இவர்களது விளைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு நெல்லை கிராப்ட்ஸ் விற்பனை அங்காடியில் பிரத்யேகமான தனி அலகு உருவாக்கப்பட்டு, இடைத்தரகர்களின் இடையூறின்றி காணி மக்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய முழு பயனும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக லாபம் கிடைத்து வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொருநை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ரூ.29.20 இலட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் அகழாய்வு பணிகள், துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தூய நெல்லைக்கு பெருமை தாமிரபரனியை தூய்மை படுத்தும் பணி மேற்கு தொடர்ச்சி மலை காணி குடியிருப்பு பகுதியிலிருந்து தொடங்கி 62 கி.மீ தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு திட்டப்பணிகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், மக்களின் நலனிற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) எம்.சுகன்யா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Updated On: 7 May 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்