/* */

படிப்புக்கு பார்வையின்மை ஓர் தடையில்லை..திருநெல்வேலி சப்கலெக்டர் கோகுல் கடந்து வந்த பாதை..

திருநெல்வேலி மாவட்ட பயிற்சி சப் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட கோகுல் ஒரு பார்வையற்றவர். படிப்புக்கு பார்வையின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள கோகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

படிப்புக்கு பார்வையின்மை ஓர் தடையில்லை..திருநெல்வேலி சப்கலெக்டர் கோகுல் கடந்து வந்த பாதை..
X

கோகுலுக்கு வாழ்த்து தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

பாரம்பரியம் கொண்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு இன்று ஓர் அற்புத நிகழ்வாக உருமாறியுள்ளது. ஆம்! இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பயிற்சிக்குப் பிறகு ஏதாவது ஒரு மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பொறுப்பேற்று செயல்படுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக (பயிற்சி) கோகுல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இது வழக்கமான நிகழ்வு.

ஆனால், அற்புதமான நிகழ்வு என்னவென்றால், உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கோகுல் ஒரு பார்வையற்றவர் என்பதுதான். கண் பார்வையற்ற ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாழ்த்து தெரிவித்தார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகனான 26 வயது கோகுல் கண் பார்வையற்றவராக இருந்த போதிலும், முதுகலைப் படிப்பில் ஆங்கிலம் முடித்துள்ளார். அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக இன்று பணியை தொடங்கி உள்ளார் கோகுல்.

கோகுல் கடந்து வந்த பாதை:

நமது நாட்டில் உள்ள கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுவது இந்திய குடிமைப்பணி தேர்வு. எத்தனையோ பேர் அந்தத் தேர்வில் முயற்சி செய்து வெற்றி பெற முடியாத நிலையில் பார்வையற்றவரான கோகுல் சாதனை புரிந்து இன்று பணியை தொடங்கி உள்ளார்.

திருவனந்தபுரம் திருமலையைச் சேர்ந்தவர் கோகுல். இவரது தந்தை சுரேஷ்குமார் தேசிய மாணவர் படை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் சோபாகுமாரி திருவனந்தபுரத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த நிலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான படிப்பை தொடர்ந்துள்ளார் கோகுல்.

இந்நிலையில், இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் அகில இந்திய தரவரிசையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டுள்ளார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ஐஏஎஸ் அதிகாரிகள் கையாளும் முறையை கோகுல் அறிந்துள்ளார். வயநாட்டில் ஆட்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல இளம் ஐஏஎஸ் அதிகாரிகளே முன்வந்து செயல்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி 24 மணி நேரமும் வேலை செய்துள்ளார். அதுவே கோகுலுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்று அகில இந்திய அளவில் 804 ஆவது இடத்தைப் பெற்றார் கோகுல். ஒரு பிரத்யேக கால அட்டவணையைப் பின்பற்றுதல், கற்றல் இலக்குகள் மற்றும் சரியான பொருட்களிலிருந்து படிப்பது ஆகிய மூன்று பகுதிகளிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என கோகுல் தெரிவித்துள்ளார்.

தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்தை முதலில் உடைக்க வேண்டும். படிப்பு விவரங்களை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எந்தவொரு தலைப்பு கொடுக்கப்பட்டாலும் அது குறித்து விரிவாக எழுதுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி தங்களுக்குள் டெஸ்ட் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்திய குடிமைப் பணி தேர்வில் முக்கியமானது நேர்காணல். அதை முறியடிப்பது மிகவும் கடினமானது. நேர்காணலில் கேட்கப்படும் கேள்வியை நன்கு புரிந்து கொண்டு அது குறித்து விரிவான மற்றும் சரியான பதிலை அளிக்க வேண்டியது அவசியம் என கோகுல் தெரிவித்துள்ளார்.

பிறவியிலேயே பார்வையற்றவரான கோகுல் இன்று ஓர் ஐஏஎஸ் அதிகாரி என்பது எளிதில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகும். படிப்புக்கும், வாழ்வில் முன்னேறுவதற்கும் பார்வையின்மையோ, உடல் குறைபாடோ ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் கோகுல்.

தனது வாழ்க்கைப் பாதையில் கடினமான சூழல்களை எதிர்கொண்டு அவற்றை சுமையாக கருதாமல் எளிதாக எடுத்துக் கொண்டு பல தடைகளை கடந்து வந்து நம் முன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கும் கோகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Updated On: 7 Nov 2022 4:18 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?