/* */

கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்: பாெதுமக்கள் கடும் அவதி

திருநெல்வேலி டவுணில் கால்வாயை ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்றி, கால்வாயை ஆழப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்: பாெதுமக்கள் கடும் அவதி
X

திருநெல்வேலி டவுண் அருகே உள்ள கால்வாயில் ஆக்கிரமித்துள்ள அமல செடிகள்.

நெல்லை கால்வாயை ஆக்கிரமித்து உள்ள அமலைச் செடிகளை அகற்றி கால்வாயை தூர்வாரி தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலியில் பெய்த தொடர் கனமழையால் நெல்லை டவுன் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் கடந்த ஒரு வார காலமாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பிற்கு முக்கிய காரணம் திருநெல்வேலி டவுண் அருகே உள்ள கால்வாயில் தண்ணீர் சீராக செல்லக் கூடிய கால்வாயில் அமல செடிகள், புட்செடிகள் வளர்ந்த காரணத்தால் தண்ணீர் செல்ல முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குட்பட்டனர்.

இக்கால்வாய் திருவேங்கடநாதபுரம், சங்காணி, குன்னத்தூர், தென்பத்து, கரிக்காத்தோப்பு, இடகரை,சொக்கட்டான் தோப்பு, பாட்டபத்து, கல்லணை, கம்பு கடைதெரு, மேட்டு தெரு, கன்னியாக் குடிதெரு, நெல்லை டவுண் ஆகிய ஊர்களுக்கு பல ஏக்கர் விவசாயப் பாசனத்திற்கு பயன்படுகிறது. மேலும் அப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த வெள்ளப் பெருக்கால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அமல செடிகள், புட்செடிகளை அகற்றி, கால்வாயை ஆழப்படுத்தி, தடுப்பு சுவர்களை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Nov 2021 5:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?