/* */

ஊர் பொதுமக்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

நெல்லையில் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக ஊர் பொதுமக்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

ஊர் பொதுமக்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் விழிப்புணர்வு
X

நெல்லையில் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக ஊர் பொதுமக்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோபாலசமுத்திரம், கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டில் கோபாலசமுத்திரம், கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதிகளை சேர்ந்த ஊர் பொதுமக்களுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பொது மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேசியதாவது:- சமூக நல்லிணக்கம் குறித்தும், சமூகத்தின் ஒற்றுமையை பேணுதல் குறித்தும், ஜாதி ரீதியான உயர்வு, தாழ்வுகளை களைவதற்கு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவும், சமூக வேறுபாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகளையும், அதனால் ஒவ்வொரு சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 5:43 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...