/* */

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
X

மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் முன்னிலையில் இன்று (15.06.2022) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்ததாவது:- தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கடன் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கடன் பெறும் பயனாளிகள் தேர்வு முகாம் இன்று நடைபெற்றது. 125 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வீட்டுக்கடன் பெறுவதற்கான மனுக்களை இன்று பெறப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் கடன் வழங்குவதற்கு மத்திய கூட்டுறவு வங்கி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் தவனைகளை தவறாமல் செலுத்தி முடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு பெற்று கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு பெருவதற்கான முகாம்கள் வட்டார அளவில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் சுபாஷினி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2022 2:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...