/* */

நெல்லையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை

நெல்லையில் மாஸ்க் அணியாமல் வரும், வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நெல்லையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை
X

நெல்லையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


தமிழ்நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நெல்லை மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக நேற்று ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 792 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் டவுன் காவல் நிலைய போலீசார் டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து அவர்களை கொரோனா பரிசோனை செய்ய வைத்தனர். இதற்காக நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர். மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இனிமேல் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்று போலீசார் அவர்களிடம் அறிவுறுத்தினார். அதேபோல் கே.டி.சி. நகரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்த ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மறுபுறம் போலீசார் மாஸ்க் அணியாத பொதுமக்களை கண்காணித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது மற்றும் இதுபோன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்