உழவர் திருநாளிலும் உடல் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள்.

கொரோனா தொடரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களை உழவர் திருநாளிலும் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உழவர் திருநாளிலும் உடல் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள்.
X

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உழவர் திருநாளிலும் உடல் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள்.

கொரோனா நோய் தொற்றால் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவர் குளத்தை சேர்ந்த ஒருவர், சேரன்மகாதேவியை சேர்ந்த ஒருவர், நகரை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்,

இந்நிலையில் இறந்தவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரினர். இதனை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தன்னார்வல மீட்புக்குழுவினர் உடலைப் பெற்று எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் தேவர்குளம், சேரன்மகாதேவி மற்றும் வி.கே.புரம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு சென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதப்பிரகாரம்‌ நல்லடக்கம் செய்தனர்.

இக்குழுவினர் கொரோனா முதலாவது மற்றும் இரண்டாம் அலையின் போது 160 உடல்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்.

Updated On: 15 Jan 2022 1:39 PM GMT

Related News