/* */

கலா உத்சவ் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான 2021 கலை திருவிழா போட்டிகளில் நெல்லை மாவட்ட மாணவ. மாணவியர் முன்று வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை.

HIGHLIGHTS

கலா உத்சவ் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
X

மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் 2021 போட்டியில் வெள்ளி பதக்கங்கள் பெற்ற மாணவ-மாணவியர்களை கலெக்டர் வே.விஷ்ணு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் 2021 போட்டியில் வெள்ளி பதக்கங்கள் பெற்ற திருநெல்வேலி மாவட்ட மாணவ-மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் 2021 போட்டியில் வெள்ளி பதக்கங்கள் பெற்ற திருநெல்வேலி மாவட்ட மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு சான்நிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) சார்பாக நவம்பர் 16 முதல் 18 வரை சேலம் சோனா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான 2021 கலை திருவிழா போட்டிகளில் திருநெல்வேலி மாவட்ட மாணவ. மாணவியர் முன்று வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

2020-2021ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இசை நடனம் மற்றும் வண்ண ஓவியம் (Music (Vocal & Instrument) Dance. Paining எனும் நான்கு அமைப்புகளில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநரின் உத்தரவின் பேரில் மாநில அளவிலான கலா உத்சவ் 2021 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் சேலம் சோனா கல்லூாயில் நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் திருநெல்வேலி மாவட்ட, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) சார்பாக மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 9 மாணவர் மற்றும் 9 மாணவியர் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர். கலா உத்சவ் போட்டிகள் பாரம்பரிய செவ்வியல் (Classical) கிராமிய சம காலத்திய (Contemporary) ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாக வைத்து வாய்ப்பாட்டு இசை, (தனிநபர்), கருவி இசை (தனிநபர்), நடனம் (தனிநபர்), வண்ண ஓவியம் வரைதல் (தனிநபர்) ஆகிய நான்கு பிரிவுகளில் மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் கர்நாடக இசைக் கருவி வாசித்தல் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண் செல்வம், மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், நாட்டுப்புற இசைக்கருவி வாசித்தல் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆரிஷ் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், காண்கலை முப்பரிமாணம் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி முகி ரட்சயா மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்தனர்.

மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவியர்களையும். தலைமையாசிரியர்களையும். வெள்ளி பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியர்களையும் இவர்களுக்கு பயிற்சி கொடுத்த பொறுப்பாசிரியர்களையும், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தளாளர் மற்றும் தலைமையாசிரியரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டினார்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷிணி, திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், முதன்மை கல்வி அலுவலர் உதவியாளர் டைட்டஸ், ஒருங்கிணைப்பாளர் கணேசன், மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலாஉத்சவ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்பகுருக்கள் ஆகியோர் இருந்தனர்.

Updated On: 2 Dec 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!