/* */

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டன

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என்று மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளிடம்  விருப்ப மனு பெறப்பட்டன
X

நெல்லை பாஜக அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான விருப்ப மனுவை  பெற்றுக்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா 


திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கு விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா கலந்துகொண்டு விருப்ப மனுவை பெற்றார். அப்போது பாஜக நெல்லை மாவட்ட செயலாளர் மகாராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலாபுஷ்பா கூறியதாவது: இன்றைக்கு நடைபெற்ற விருப்ப மனு தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் பாரதிய ஜனதா கட்சியின் வசம் கொண்டுவர இருக்கிறோம் என்பதற்கு சான்று அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றிருக்கிறது. இந்தியாவை ஆளக்கூடிய அறுதிப் பெரும்பான்மை உடைய பாஜக கட்சி பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது பாஜக பின்னோக்கி செல்கிறது என்பதற்கு இடமே கிடையாது.

பாஜக தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. பிரதமர் மோடி எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் ராகுல் காந்தியால் விமர்சிக்க மட்டும்தான் முடியும். அந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் குறை கூறி தடுக்க மட்டும்தான் செய்கிறார்கள்..விவசாயிகள் இறந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான் காரணம் அவர்கள் தூண்டிவிட்டு தூண்டிவிட்டு விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள்.

திமுக அரசு ஒரு நிர்வாக திறமை இல்லாத அரசு.அதனால் தான் அவர்கள் பொருளாதார நிபுணர்களை வைத்து ஆலோசனை கேட்டு கேட்டு எவ்வளவு நாள் நிர்வாகத்தை நடத்த முடியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைக்கு ஊழலை தட்டிக் கேட்கிறார்.அப்படி சுய அறிவு உள்ள ஒருவர் தமிழகத்தை ஆண்டாள் தான் நிர்வாக திறமையின்மை குறையும். தமிழகத்தை பொருத்தவரை ஒரு வெற்றிடம் இருக்கிறது என கூறிக் கொண்டிருக்கிறார்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப கூடிய ஒரே ஆள் அண்ணாமலை, பிஜேபி மட்டும் தான். திமுகவின் ஊழல் தலை விரித்து ஆட தொடங்கிவிட்டது. திமுகவின் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை உங்களுக்குத் தெரியும்.

பிஜேபியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் கையில் வைத்துக் கொண்டு அவருக்கு எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர் முன்னாள் அமைச்சரும் கூட மக்களின் நம்பிக்கையை பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். திமுக பாரதிய ஜனதா கட்சி கூறும் எந்த ஒரு குறைகளுக்கும் செவிசாய்க்க மறுக்கிறது. அதை நாங்க விடுவதாகவும் இல்லை. எனவே நடைபெற இருக்கக்கூடிய இந்த மாநகராட்சித் தேர்தலில் 100% பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி உறுதி என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கோம் என்று முதல்வர் சொல்லும்போதே தோல்வி என்று தான் அர்த்தம். வெள்ளம் வருவதற்கு முன்பே என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது தான் எங்கள் தலைவர் அண்ணாமலை. வருவதற்கு முன்பே காப்பாற்றுபவன் தான் ஒரு நல்ல தலைவன். வெள்ளம் வந்ததுக்கு பின்பு நான் எப்படி காப்பாற்றுவேன் என்று மத்திய அரசிடம் நிதி கேட்டுக் கொண்டிருக்கிற ஸ்டாலின், ஆறு மாதத்திற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரியுடன் கலந்தாலோசித்து எங்கெல்லாம் வெள்ளம் வரும் என அறிந்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கேள்வி. பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருவெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது, வாரம் ஒருமுறை பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் குறைக்க வேண்டும் என்றும், அதில் 7 மாநிலங்கள் குறைத்திருக்கிறது. ஏன் திமுக அரசு குறைக்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு கனிமொழி, எம்பி ஞானதிரவியம் பெட்ரோல், டிசல் உயர்வுக்கு போராட்டங்கள் நடத்தினார்கள். இப்போது மத்திய அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருக்கும் போது தமிழக அரசு மட்டும் ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக நாளைய தினம் எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

தேர்தல் கூட்டணி குறித்து கடைசி நேரத்தில் எங்களது மாநில தலைவரும், இந்திய தேசிய தலைமையும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள் என்று மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

Updated On: 21 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...