திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி திருவிழா

நெல்லை டவுன் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி திருவிழா
X

நெல்லை டவுன் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி திருவிழா நடைபெற்றது

நெல்லை டவுன் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விரதம் இருந்த 74 பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

நெல்லை டவுனில் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கால் நடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பூமதி திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள் 8 நாட்கள் கோவிலில் தங்கி விரதமும், தினமும் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மாலையில் விரதம் இருந்த பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடி கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. நெல்லை டவுன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வரப்பட்டு பக்தர்கள் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீர்த்த குடம் எடுத்து வந்த நபர் இறங்கிய உடன் விரதமிருந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றும் போது இரு பக்தர் கால் இடரி அக்னி குண்டத்தில் விழுந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக அவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்நிகழ்ச்சியை காண திருவிழா போல் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து பூமிதி விழாவை கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...