/* */

சங்கர்நகர் பள்ளியில் மாணவர்களுக்கு மது தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டி

சங்கர் நகர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கர்நகர் பள்ளியில் மாணவர்களுக்கு மது தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டி
X

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற சங்கர் மேனிலைப் பள்ளி மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற சங்கர் மேனிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு.

நெல்லையை அடுத்த சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை சேர்ந்த மாணவ- மாணவியர்களுக்கு திருநெல்வேலி கோட்டாட்சியர் சார்பில் நடைபெற்ற மதுவிலக்கு, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கட்டுரை, நாடகம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பாராட்டு விழா சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நாடகம் மற்றும் கட்டுரைப் போட்டியில் மாணவிகள் சித்ரா, ஆனந்தி, மவுரியா, அகல்யா தேவி, அனுசியா, நந்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளிக் கல்விக் குழுத் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை உபதலைவருமான எஸ்.தட்சிணாமூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்வில் பள்ளி செயலாளர் மற்றும் ஆலை துணை பொது மேலாளர் த.சு.பத்மநாபன், பள்ளி தலைமையாசிரியர் உ. கணேசன், ஆலை மனிதவள முதுநிலை மேலாளர் இரா. நாராயணசாமி, உதவித் தலைமையாசிரியர். ஆ. ரெங்கநாதன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன், தமிழ் ஆசிரியை.ரா. பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 3:31 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்