/* */

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதற்கு நெல்லையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

HIGHLIGHTS

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர் கொண்டாட்டம்
X

நெல்லையப்பர் கோவிலில் அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்பு வழங்கினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு. நெல்லையப்பர் கோவிலில் அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இனிப்பு வழங்கினர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்ட திட்ட விதி 30, பிரிவு 2ன்படி கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக நெல்லையில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவம், மாவட்ட கழக அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், பாறைப் பகுதி மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, நெல்லை கிழக்கு பகுதி கழக செயலாளர் காந்திவெங்கடாச்சலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னால் அரசு வழக்கறிஞர் அன்பு, மேற்கு பகுதி வாகை மணி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Dec 2021 5:56 AM GMT

Related News