/* */

திருநெல்வேலியில் தலைப் பொங்கலை கொண்டாடிய இளம் புதுமண தம்பதியினர்

நெல்லை உடையார்பட்டியில் தலைப்பொங்கலை புதுமண தம்பதிகள் ஆனந்த்- திவ்யலட்சுமி உற்சாகமாக கொண்டாடினார்கள்,

HIGHLIGHTS

திருநெல்வேலியில் தலைப் பொங்கலை கொண்டாடிய இளம் புதுமண தம்பதியினர்
X
நெல்லை உடையார் பட்டியில் புது மண தம்பதியினர் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இன்று கொண்டாடினார்கள். நெல்லை மாவட்டத்தில் அதிகாலையிலேயே உற்சாகமாக பொங்கல் பண்டிகையை தொடங்கினர். குறிப்பாக நெல்லை உடையார்பட்டி பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் தெரு முழுக்க வீட்டு வாசல்களில் மக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதற்காக தெருவெங்கும் வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலங்கள் இட்டு வீடுகளை மலர்களால் அலங்கரித்து தயார் செய்து இருந்தார்கள். இதில் குறிப்பாக திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன ஆனந்த் மற்றும் திவ்ய லட்சுமி தம்பதியினர் தங்களது தலைப் பொங்கலை அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர். பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருவிழாவில் புதுமணத்தம்பதிகள் தலை பொங்கல் கொண்டாடும் நிகழ்வுக்காக மணமகள் வீட்டில் இருந்து சீர்வரிசை பொருட்கள் மணமகன் வீட்டில் ஒரு வாரம் முன்பாகவே கொண்டு வரப்பட்டு இருந்தது.

நெல்லை உடையார்பட்டியில் மணமகன் வீட்டில் வாசல் நிறைத்து வரையப்பட்டிருந்த வண்ணக்கோலம் மீதாக அடுப்புக் கட்டிகளை அடுக்கி அதன் மீது மஞ்சள்குலை சூடிய புதுப்பித்தளை பானையை வைத்து பொங்கல் வைத்தனர். புதுமணத்தம்பதிகள் இதுவரை தங்கள் தனித்திருந்து கொண்டாடிய பொங்கல் இன்று கணவன்- மனைவியாய் ஒன்று சேர்ந்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என உற்சாகமாக தெரிவித்து பொங்கல் பானையில் பால் பொங்கி வழிய ஏற்கனவே களைந்து வைத்து எடுத்து இருந்த சம்பா பச்சரிசி போட்டு குலவையிட்டு பொங்கிய பொங்கலை கதிரவனுக்கு படைத்து இயற்கையை வணங்கி கொண்டாடினர்.

Updated On: 14 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்