/* */

நெல்லை சுலோச்சனா முதலியார் பாலத்தின் 179வது பிறந்த நாள் விழா காெண்டாட்டம்

பாளையங்கோட்டை-நெல்லை இரட்டை நகரத்தின் இணைப்பு பாலத்தை அமைத்து கொடுத்த சுலோச்சனா முதலியாரின் 179 ஆவது பிறந்த நாள் விழா.

HIGHLIGHTS

நெல்லை சுலோச்சனா முதலியார் பாலத்தின் 179வது பிறந்த நாள் விழா காெண்டாட்டம்
X

நெல்லையில் சுலோச்சனா முதலியார் பாலத்தின் 179 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தனிமனித கொடையாளி சுலோச்சனா முதலியார் பாலத்தின் 179 ஆவது பிறந்தநாள் விழா கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலத்தின் முகப்பில் சிறப்பாக நடைபெற்றது.

பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.S சண்முகம், ஆகியோர் தலைமை தாங்கினர். வழக்கறிஞர் வி.டி. திருமலையப்பன், கவிஞர் சு.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சுலோச்சனா முதலியாரின் 6 ஆவது தலைமுறை (எள்ளு பேரன்) தி.ப.பக்தவச்சலம், அவரது துணைவியர் கமலம், மகள் கிருத்திகா ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள். சுலோச்சனா முதலியார் பாலத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி 179 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒரு தனி மனிதனுடைய கொடையினால் பாளையங்கோட்டை- நெல்லை இரண்டையும் இணைக்கும் ஒரு பாலத்தை அமைத்துக் கொடுத்த பெருமையை நினைவு கூறப்பட்டது. தனிமனித கொடையாளி சுலோச்சனா முதலியார் பெருமைகள் பறை சாற்றப்பட்டது. கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, பைபாஸ் மெடிக்கல் சண்முகவேலன், வழக்கறிஞர் கணகசபாபதி, ம.தி.தா.இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் நமச்சிவாயம், பொருநை தளவாய் நாதன், மேனாள் வங்கி மேலாளர் வெற்றிவேல், ரோட்டரி.பாலசுப்பிரமணியன், அமிர்தராமலிங்கம், தளவாய் குமாரசாமி, உக்கிரன் கோட்டை மணி, முனைவர்.சரவணக்குமார், கவிஞர் செ.ச.பிரபு, முத்துவேல், சிற்பிபாமா, தளவாய் மாடசாமி, குமாரவேல், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டாகள்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாமனிதர் தனிக் கொடையாளி சுலோச்சனா முதலியார் பாலம் புகழ் போற்றும் நலக்குழு சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக சுலோச்சனா முதலியார் ஆறாவது தலைமுறை எள்ளுப்பேரன் பக்தவச்சலம் அவர் துணைவியார் கமலா, மகள் கிருத்திகா ஆகியோரை மாநகர காவல்துறை ஆணையர்.டி.பி. சுரேஷ்குமார் பாராட்டி பொன்னாடை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கி பாராட்டினார்.

Updated On: 27 Nov 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?