/* */

நெல்லையில் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம்

தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்த்து விழுந்தது

HIGHLIGHTS

நெல்லையில் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம்
X

கோடீஸ்வரன் நகர் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் தொடர் மழையால் இன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.

நெல்லையில் தொடர் மழையால் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்த்து விழுந்தது. மரத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் டவுனில் போக்குவரத்து துண்டிப்பு.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியான டவுனில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று தொடர் மழையால் இன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடீஸ்வர நகர் பெட்ரோல் நிலையம் அருகில் கம்பீரமாக காட்சி அளித்து வந்த இந்த ஆலமரம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் கோடைகாலங்களில் நிழல் கொடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு பேருதவியாக இருந்து வந்தது. இன்று காலை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிஷ்டவசமாக மரம் விழும் போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டி மட்டும் சேதமடைந்தது.

தகவல் அறிந்து பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரம் என்பதால் உடனடியாக அப்புறப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரத்யேக மரம் அறுக்கும் கருவிகள் கொண்டு வரப்பட்டு தற்போது தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சாலை நடுவே மரம் சாய்ந்து கிடப்பதால் டவுன் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நெல்லையிலிருந்து சுத்தமல்லி, முக்கூடல், அம்பாசமுத்திரம், பாபநாசம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.


தாெடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குறுக்குத்துறை முருகன் காேவிலை மூழ்கடித்தவாறு செல்கிறது.

இதேபோல் அம்பாசமுத்திரம் பகுதிகளில் வரும் வாகனங்களும் மாற்று வழியாக நகருக்குள் திருப்பி விடப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். மரத்தின் விழுதுகள் பூமியில் அதிகளவு ஊன்றி காணப்பட்டது. இந்த விழுதுகள் போக்குவரத்துக்கு இடையே இருப்பதாக அவ்வப்போது அதை வெட்டி அப்புறப்படுத்தியதஎன் காரணமாகவே மரம் வலுவிழந்து வேரோடு சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நெல்லை அணைகளில் தொடர்ந்து உபரிநீர் அதிகளவு திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் இன்று மூன்றாவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் அதிகபட்சம் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு 7500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 8500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது தவிர நம்பியாறு / கொடுமுடியாறு ஆகிய அணைகளில் இருந்து சுமார் ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடடப்பட்டுள்ளது.

மேலும் தென்காசி மாவட்டம் கடனா அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடுவதால் தாமிரபரணி ஆற்றில் இரு கலைகளை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே ஆற்று கரையோரம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 30 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  6. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  10. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...