பணகுடியில் பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோ: இளைஞர் கைது

பணகுடியில் பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பணகுடியில் பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோ: இளைஞர் கைது
X
பைல் படம்.

திருநெல்வேலி மாவட்டம், பணக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை பணகுடி வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் தவறான எண்ணத்துடன் கிண்டலடித்து வந்துள்ளார்.

கடந்த 20ம் தேதி அன்று அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்ற போது, அவர் சத்தம் போடவும் அவரை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். பின் அப்பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றும், வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்த செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் மனு அளித்தார்.

மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்குக்கு உத்தரவிட்டதன் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான போலீசார் குற்றவாளியை தேடிவந்த நிலையில் நேற்று செல்வகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Updated On: 28 Nov 2021 3:56 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  2021 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள்...
 2. நாகப்பட்டினம்
  நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்
 3. திருவாரூர்
  திருவாரூர் மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசு
 4. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
 5. இந்தியா
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரங்கள்
 6. மதுரை மாநகர்
  குடியரசு தினவிழா: மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் கொடியேற்றி வைத்தார்
 7. அவினாசி
  திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு
 8. தர்மபுரி
  குடியரசு தினம்: தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றினார்
 9. திருவெறும்பூர்
  துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்