/* */

மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

நெல்லை ஏர்வாடி மலைப்பகுதியில் பள்ளி மாணவர்கள் மூலம் 11 ஆயிரம் விதைப்பந்துகள் மூலம் 44 ஆயிரம் மரவிதைகள் வீசப்பட்டது

HIGHLIGHTS

மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர்
X

ஏர்வாடி மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காந்திநகர் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் மரவிதை பந்துகள் வீசும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் திட்டம் முக்கியமானதாகும். முதற்கட்டமாக சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் ஏர்வாடி மலை குண்டு பகுதியில் பள்ளி மாணவியர்கள் மூலம் 11 ஆயிரம் விதைப்பந்துகள், 44 ஆயிரம் மரவிதைகளுடன் வீசப்படுகிறது. எளிதாக கிடைக்ககூடிய வேம்பு விதைகள் வீசப்பட்டது. இந்த மாதம் மழை காலங்கள் இதுவே சரியான நேரம் என்பதால் இன்று இந்த மரக்கன்று விதைகள் வீசும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி, கல்லூரி வளாகத்தில் உள்ள மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளில் மட்டும் 40 மீ.மீ மழை பெய்துள்ளது. அனுமன் நதியில்லுள்ள 44 குளங்கள் நீர் நிரம்பியுள்ளது. இது நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

மழை குறைந்து வருவதால்.இனி வரும் காலங்களில் தான் வேளாண் துறையின் மூலம் மாவட்டத்தில் ஏதேனும் பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதற்கான கணக்கீடும் பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழையினால் பாதிப்படைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழையினால் உயிர் சேதம் ஏதுவுமில்லை என்றார் மாவட்ட ஆட்சியர்.

முன்னதாக, நாங்குநேரியில் உள்ள பெரியகுளத்தில் மலைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு கரைகளின் உறுதிதன்மை குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளனவா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்யப்படுகிறதா என்பதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை கள இயக்குநர் முருகன் இ.வ.ப., நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி, ஏர்வாடி பேரூராட்சி செயல் அலுவலர் ஞானசுந்தரன், மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், மாணவ- மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...