நெல்லையில் கல்குவாரியால் இடையூறு : இல்லை வேலைவாய்ப்பு கிடைகுது - இருதரப்பு கலெக்டரிடம் மனு

கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லையில் கல்குவாரியால் இடையூறு : இல்லை வேலைவாய்ப்பு கிடைகுது - இருதரப்பு கலெக்டரிடம் மனு
X

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ள கல்குவாரியை அகற்றக் கூடாது.. மூட வேண்டும்... இரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியான பொன்னார் குளம், சங்கநேரி, புத்தேரி, நக்கனேரி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்குவாரியில் பணியாற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை கல்குவாரியை அகற்றக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் இருந்து பெண்கள் ஆண்கள் என சுமார் 100 பேர் கொக்கிரகுளம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்துள்ளது. வீடுகளில் சுவர்கள் விரிசல் விடுவதாகவும், இந்த கல்குவாரியை நிறுத்த வேண்டுமென கடந்த திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கல்குவாரி தொடர்பாக இருவேறு கருத்துகளை முன் வைத்துள்ள இரு தரப்பினருடைய மனுக்களையும் உரிய விசாரணையை நடத்தி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 2021-07-23T07:17:30+05:30

Related News