கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய்- மகன் நீரில் மூழ்கி பலி

கும்பிகுளம் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய்- மகன் நீரில் மூழ்கி பலியாகினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய்- மகன் நீரில் மூழ்கி பலி
X

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் ஊரைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் வயது 42. இவர் தனது மகன் சுபாஷ் வயது 11 இவரை கூட்டிக்கொண்டு அருகில், பயன்பாட்டில் இல்லாத கும்பிகுளம் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது மகன் சுபாஷ் கால் தவறி நீரில் விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன பேச்சு தாய், தனது மகன் சுபாஷ்சை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்துள்ளார். அப்போது மூச்சுத்திணறி பேச்சு தாயும் அவரது மகன் சுபாஷ் இறந்தனர்.

குளிக்கச் சென்ற பேச்சு தாயும், மகனும் வராததால் அவரது உறவினர்கள் கல்குவாரி குட்டைக்கு சென்றனர். அப்பொழுது பேச்சு உடைகள் கரையில் இருப்பதை கண்டு அருகில் தேடியுள்ளனர். அங்கு தேடியும் கிடைக்காததால் நீரில் மூழ்கி இருப்பார்கள் என சந்தேகித்து பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் தேடியுள்ளனர். பேச்சையும் அவரது மகன் சுபாஷ் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராதாபுரம் காவல்துறையினர் நேரில் வந்து பேச்சு தாய் மற்றும் அவரது மகன் சுபாஷ் ஆகியோரது உடல்களை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குட்டையில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 704 பேருக்கு கொரோனா தொற்று
 2. கரூர்
  கரூரில் குழந்தை பலி: தனியார் மருத்துவமனை முன்பு சடலத்துடன் முற்றுகை
 3. முசிறி
  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
 4. தாராபுரம்
  சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
 5. தர்மபுரி
  தனி அலுவலர்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஊராட்சி தலைவர்கள்...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை
 7. தர்மபுரி
  துணிச்சல் இருந்தால் பாஜகவினர் சாதியை ஒழிக்கட்டும்: திருமுருகன் காந்தி
 8. உடுமலைப்பேட்டை
  தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம்
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்