திருடின்னு பார்த்தா நைட்டி போட்ட ஆம்பிளை! சிக்கிய திருடனை போலீசார் கைது

திசையன்விளை பகுதிகளில் நைட்டி அணிந்து இரவு நேரங்களில் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருடின்னு பார்த்தா நைட்டி போட்ட ஆம்பிளை! சிக்கிய திருடனை போலீசார் கைது
X

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த முருகேசன்(56) என்பவர் திசையன்விளை பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடைக்கு வந்து பார்க்கும் போது மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தள்ளது.

இதுகுறித்து முருகேசன் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் ஜமால், உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் மர்ம நபர் பெண் போல நைட்டி அணிந்து கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போனை திருடியது மேலப்பாளையத்தை சேர்ந்த சேக் மதார்(63) என்பது தெரியவந்ததுள்ளது. பின்னர் திசையன்விளை பகுதியில் சுற்றி திரிந்த ஷேக் மதாரை திசையன்விளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து கடையில் திருடிய செல்போன் மற்றும் ₹16,000 பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2021-08-12T10:00:19+05:30

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
 5. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா