நெல்லை: உவரி கடலில் மூழ்கி பொறியியல் கல்லூரியில் பயின்ற அண்ணன், தம்பி பலி

நெல்லை மாவட்டம், உவரி கடலில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர்களான அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை: உவரி கடலில் மூழ்கி பொறியியல் கல்லூரியில் பயின்ற அண்ணன், தம்பி பலி
X

நெல்லை மாவட்டம், உவரி கடலில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர்களான அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள கீழ துரை குடியிருப்பைச் சேர்ந்த அருள் என்பவர் தனது குடும்பத்துடன் உவரி அந்தோனியார் ஆலயத்திற்கு வழிபட சென்றுள்ளார். வழிபாட்டை முடித்துவிட்டு அவரது மகன்கள் ஆக்னல் மற்றும் பிரவீன் இருவரும் வேளாங்கண்ணி மாதா குருசடி அருகே கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அலை அதிக வேகத்துடன் வந்து இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதாம். இதனையடுத்து கடலுக்குள் மூழ்கிய அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி கூடன்குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஆக்னல் (பெட் பொறியியல் கல்லூரியிலும்) மற்றும் (நாலாட்டின்புதூர் பொறியியல் கல்லூரியிலும்) படித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் கீழதுரை குடியிருப்பு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Updated On: 13 July 2021 12:44 PM GMT

Related News