விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அதிமுக வேட்பாளர் இன்பதுரை

பிரச்சாரத்திற்கு சென்றபோது விபத்தில் சிக்கியவருக்கு ராநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை உதவினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அதிமுக வேட்பாளர் இன்பதுரை
X

ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை இன்று காலை பிரசாரத்திற்காக ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரம்- கூத்தங்குழி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த இன்பதுரை உடனடியாக தனது காரை நிறுத்தி இறங்கி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக விரைந்து வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விபத்தில் சிக்கியவர் பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வாகன டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து ராதாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் சிக்கியவர்களை கண்டவுடன், உதவிய அதிமுக வேட்பாளர் இன்பதுரையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.ய

Updated On: 28 March 2021 2:30 PM GMT

Related News