திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது
X

நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது வீட்டு மாடியில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதுபற்றி அப்பகுதியில் வசிக்கும் தேமுதிக நகர செயலாளர் நடேஷ் அரவிந்த் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வீரர்கள் வலையுடன் வந்து மர நாயை பிடித்தனர். ஆனால் வலையில் இருந்து தப்பிய மரநாய் சந்தி அம்மன் கோவில் எதிரே உள்ள பிள்ளையார் கோவில் தெரு ஓடையில் பதுங்கிக் கொண்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்தனர். இதனால் வெளியே வந்த மர நாயை பிடித்து பின்னர் வானவில் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 13 May 2021 1:54 AM GMT

Related News