நிலப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு உபரிநீரை திறந்து வைத்த அப்பாவு.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நிலப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு உபரிநீரை திறந்து வைத்த அப்பாவு.
X

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகிலுள்ள நிலப்பாறை அனைகட்டிலிருந்து ராதாபுரம் விவசாயிகள் பாசனத்திற்கு உபரி நீரை சபாநாயகர் திறந்து வைத்தார்.

நெல்லை குமரி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நிலப்பாறை அணைக்கட்டிலிருந்து ஆண்டு தோறும் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து வரும் குறிப்பிட்ட அளவுதண்ணீர் ராதாபுரம் பாசனத் திற்காக திறந்து விடப்படும்.

அதன்படி கடந்த ஒரு வார காலமாக குமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் அதிக மழை பெய்ததால் அதிகளவு தண்ணீர் நிரம்பி வழிந்தது.

இதனால் உபரி நீர் அதிகளவில் வீணாவதை தடுக்கும் வகையில் நிலப்பாறை. அணைக்கட்டிற்கு தண்ணீர் திருப்பப்பட்டு தேக்கி வைக்கப்பட்டது.இதன்மூலம் 2000 கன அடி தண்ணீர்சேமிக்கப்பட்டது. மேலும் உபரி நீர் வரத்து அதிகமாகவும் உள்ளது.

எனவே இதனை ராதாபுரத்திலுள்ள. 52 குளங்களுக்கு ராதாபுரம் கால்வாய் மூலம் திறந்து விட சபாநாயகர். அப்பாவு இரு மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு இஞ்சினியர் களிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

மேலும் குமரி மாவட்டத்திலுள்ள இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேறும் வரை ராதாபுரம் பாசனக்கால்வாயில் தண்ணீரை திறந்து விட வும் சபாநாயகர் உத்தரவிட்டார்.அதன் பேரில் இன்று நிலப்பாறை வந்தடைந்த 2000 கன அடி முதல் சுமார் 3000 கன அடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.பி.ஞான திரவியம் நெல்லை தாமிரபரணி வடி நீர் கோட்ட கண்காணிப்பு இன்ஜினியர் ஞான சேகர் நெல்லை கோட்டம் திட்டமிடுதல் வடிவமைப்பு. இன்ஜினியர் பத்மா குமரி கோதையார் வடிவமைப்பு கோட்ட உதவி இன்ஜினியர் அருள் சன் ரைட் உதவி இன்ஜினியர் சுபாஷ் மற்றும்பலர் கலந்து கொண்டார்கள்

Updated On: 18 May 2021 10:13 AM GMT

Related News