/* */

கொக்கிரகுளத்தில் சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கொக்கரகுளத்தில் சீரான குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

HIGHLIGHTS

கொக்கிரகுளத்தில் சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X

கொக்கிரகுளம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குடிநீர் சீராக வராததை கண்டித்து நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. மேலும் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியில் கடந்த இரண்டு வருட காலமாக குடிநீர் சீராக வராமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனை சரிசெய்ய கோரி மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் இதனை சரி செய்ததாக தெரியவில்லை.

இதனையடுத்து இன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மேலப்பாளையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் முறையான குடிநீர் வழங்குவதாகவும், சீரமைக்கப்படாமல் இருந்த பைப் லைன்கள் சரி செய்ய உள்ளதாகவும் அவர்கள் பொதுமக்களிடம் உத்தரவாதம் அளித்தது தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கும்போது கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வராமல் இருந்தது. தற்போது ஒரு மாதமாக முழுவதுமாக தண்ணீர் வராமல் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தர மறுத்தால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Updated On: 25 Feb 2022 10:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!