ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டார் . 

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிழக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டார் .

ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை மாவட்டத்தில் அக்டோர் 6 ந்தேதி முதல் கட்டமாகவும், 9-ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் நடக்கிறது. இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி பதவிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டது. பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பதவியிடங்கள் உள்ளது. இதில் 9 இடங்கள் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்டு வருகிறது. இதில் 8 இடங்களில் திமுக போட்டி போடுகிறது. ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 89 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடம் உள்ளது. இதில் 76 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் கூட்டணிக் கட்சிகளுக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பொறுப்பாளராக அம்பாசமுத்திரம், நெல்லை தொகுதிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ராதாபுரம் தொகுதிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நாங்குநேரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜூம், நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சித்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, மற்றும் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Sep 2021 11:06 AM GMT

Related News