/* */

போதைப் பொருட்கள் தீமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு.

HIGHLIGHTS

போதைப் பொருட்கள் தீமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
X

பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு பிரிவு போலீசார் பள்ளி மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், மதுபானம் கள்ளச்சாராயம் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி மற்றும் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி கலந்துகொண்டு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தது.

Updated On: 16 Dec 2021 11:55 AM GMT

Related News