/* */

மேலப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையை மீட்டுத்தர வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு

மேலப்பாளையம் கரீம்நகரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கழிவு நீர் ஓடையை மீட்டுத்தரக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு.

HIGHLIGHTS

மேலப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையை மீட்டுத்தர வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு
X

கரீம்நகர் ஜமாஅத் தலைவர் சாகுல் அமீது உஸ்மானிய தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர். 

நெல்லை மேலப்பாளையத்தில் விரிவாக்க பகுதியான ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள கரீம்நகர் ஜமாஅத் தலைவர் சாகுல் அமீது உஸ்மானிய தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள கரீம் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியின் கழிவுநீர் ஓடை ரெட்டியார்பட்டி சாலை வழியாக செல்கிறது. அந்த கழிவு நீரோடையை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடும், மழைக் காலங்களில் அதிகமான தண்ணீர் தேங்குவதால் சாலைகள் வாய்க்காலக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு பல்வேறு விபத்துகள் நேரிடுகின்றன. மாவட்ட ஆணையாளர் இதை கருத்தில் கொண்டு அந்தப் பகுதி மக்களுக்கு மழை நீர் ஓடை அமைத்து தரும்படியும், மழை நீர் ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள சுற்றுச்சுவரை அகற்றி கழிவுநீர் ஓடை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது அன்வாரி, தாவூத் ஹாஜியார், இஸ்மத் கான், முஸ்தபா, புகாரி, தண்டன் சாகுல்ஹமீது உடன் இருந்தனர்.

Updated On: 22 Oct 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?