/* */

அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியம் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியக தினத்தை ஒட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியம் கண்காட்சி நடைபெற்றது

HIGHLIGHTS

அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியம் கண்காட்சி
X

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியம் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியம் கண்காட்சி நடைபெற்றது.

அருங்காட்சியகங்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் (ICOM) ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைக் கொண்டு வருகிறது.

அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட தலைப்பைச் சுற்றி வருகின்றன. அருங்காட்சியகம் என்பது உலகெங்கிலும் உள்ள கலாசாரங்கள், சமூகங்கள் மற்றும் இயற்கையிலிருந்து பல்வேறு வகையான ஆவணங்கள் மற்றும் வரலாற்று கலைப்பொருட்களின் சேகரிப்புகளைக் காண்பிக்கும் இடமாகும். ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் இந்த நாளை கொண்டாட ஒரு புதிய தீம் கொண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்தின் கருப்பொருள் 'The Power of Museums' என்பதாகும்.

அருங்காட்சியகங்கள் சமுதாயத்திலும், உலகிலும் நேர்மறையான மாற்றங்களை மாற்றும் மற்றும் வளர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்நாளின் சிறப்பை இளைய தலைமுறையினர் எடுத்துக் கொள்ளும் விதமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று கோட்டோவியம் கண்காட்சி துவங்கப்பட்டது.

கோடோவியம் என்பது மெல்லிய கோடுகளாலேயே கண்களால் நன்கு உணரக்கூடிய அளவுக்கு நுட்பமாக வரையப்பட்ட ஓவியம் கோட்டோவியம் . உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் அப்படி வரையப்பட்டதே . மெல்லிய கோடுகளாலேயே கண்களால் நன்கு உணரக்கூடிய அளவுக்கு நுட்பமாக வரையப்பட்ட ஓவியம் கோட்டோவியம் . இத்துணை சிறப்பு வாய்ந்த கோடோவியங்களை திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியினை சேர்ந்த ஓவியர் தங்கவேல் வரைந்த கோட்டோவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி துவங்கி வைத்தார். இக்கண்காட்சி இந்த மாதம் இறுதி வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் . இன்று நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில் ஸ்போக்கன் ஆங்கிலம் பற்றிய பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Updated On: 18 May 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?