நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு

நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
X

நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

நெல்லை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டத்தில் 4 மருத்துவமனையில் நார்வே நாட்டில் இருந்து 4 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ பரிசோதனை மெஷின் கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டு அதில் பரிசோதனை செய்ய கூடுதல் செலவு ஆவதால் மெஷின் பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்டமன்ற பொதுக் கணக்கு குழு பரிந்துரைக்கும் என நெல்லையில் ஆய்வுக்கு பின் குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன், சிந்தானைச் செல்வன், வேல்முருகன் ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முதலாவதாக நெல்லை வீரமாணிக்கபுரத்தில் சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பணி புரியும் மகளிர் விடுதி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி, மற்றும் சுமார்ட் சிட்டி பணிகள் நடந்து வரும் நேருஜி கலை அரங்கம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .

பின்னர் குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். இதில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2017-2018 –ம் ஆண்டு நார்வே நாட்டில் இருந்து டெங்கு , மலேரியா ஆகியவற்றை பரிசோதனை செய்யும் மருத்துவ மெஷின் 4 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மற்றும் மாநில கணக்காயக்குழு ஆய்வு செய்து இந்த மெஷினால் அரசுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது 45 பைசாவில் செய்ய கூடிய சோதனையை இந்த மெஷின் மூலம் செய்தால் 28 ரூபாய் செலவாகிறது. மருத்துவமனையில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்த மெஷினை செயல்படுத்தாமல் போட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

எனவே மக்களுக்கும் பயன்படாத, அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தி இந்த மெஷின் வாங்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாவட்டத்தில் நான்கு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மெஷின் வாங்க காரணமாக இருந்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரை செய்யும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, குழு தனி அதிகாரி ராஜா , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , மாநகராட்சி ஆணையர் சிவ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

Updated On: 29 Jun 2022 12:06 PM GMT

Related News

Latest News

 1. வானிலை
  தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
 2. அருப்புக்கோட்டை
  காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
 3. டாக்டர் சார்
  cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
 4. சேலம்
  “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
 5. லைஃப்ஸ்டைல்
  Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
 6. தமிழ்நாடு
  mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
 7. ஈரோடு
  பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
 8. ஈரோடு
  காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
 9. லைஃப்ஸ்டைல்
  Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
 10. இந்தியா
  ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு