/* */

முன்னோடி வங்கி, வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் கடன் மேளா

திருநெல்வேலியில் நடத்தப்பட்ட வங்கிகளின் சங்கமம் நிகழ்வில் ரூ.122 கோடி மதிப்பில் கடனுதவி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

முன்னோடி வங்கி, வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் கடன் மேளா
X

திருநெல்வேலியில் நடத்தப்பட்ட வங்கிகளின் சங்கமம் நிகழ்வில் சட்டமன்ற தலைவர் அய்யாவு, அமைச்சர் ராஜகண்ணப்பண் ஆகியோர் முன்னிலை.ில்  ரூ.122 கோடி மதிப்பில் கடனுதவி அளிக்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்தும் வங்கிகளின் சங்கமம் நிகழ்வில் ரூ.122 கோடி மதிப்பில் கடனுதவி சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் வழங்கினார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் வங்கியாளர்கள் குழுமம் இணைந்து நடத்தும் வங்கிகளின் சங்கமம் நிகழ்வில் ரூ.122 கோடி மதிப்பில் கடனுதவி சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்ஆகியோர் முன்னிலையில் இன்று (27-10-2021) வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தொழிலாளர்கள், விவசாயிகள், சுயஉதவிக் குழுவினர்கள், வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என பல உன்னத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கியாளர்கள் குழுமம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து வாடிக்கையாளர்களுக்கு தேவயைான வசதிகளை ஏற்படுத்தவும். அவர்களது குறைகளை போக்கவும், வாடிக்கையாளர்களுக்கு தேவயைான கடனுதவிகளை வழங்கவும், 16 வங்கிகள் இணைந்து மாபெரும் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 250 வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், தனிநபர்கடன் 61.21 இலட்சம் மதிப்பில் கடனுதவியும், 198 தொழிலாளர்களுக்கு தொழிற் கடனாக 17.8 இலட்சம் மதிப்பிலான கடனுதவியும், 572 விவசாயிகளுக்கு 21.28 இலட்சம் மதிப்பிலான கடனுதவியும், 397 சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு 22.49 இலட்சம் மதிப்பிலான கடனுதவியும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு தலா ரூ.1.94 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளும் ஆக மொத்தம் 1419 நபர்களுக்கு ரூ.122.16 கோடி மதிப்பிலான கடனுதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் உதவித்தொகை பெற்ற பயனாளிகள் முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, முன்னோடி வங்கி மேலாளர் கிரேஷ் ஜெய மோரின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சித.பசுபதி, கனரா வங்கியின் உதவி பொது மேலாளர் ஜி.ஆர்.டில்லிபாபு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமை அலுவலக முதன்மை மண்டல மேலாளர் ரவிக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி மண்டல மேலாளர் விஜயலெட்சுமி, நெல்லை மாவட்ட ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் செந்தில்குமார், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுதாராணி, பாங்க் ஆப் பரோடா வங்கி உதவி பொது மேலாளர் சீனிவாசன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மண்டல மேலாளர் கணேஷ்குமார், மற்றும் அரசு அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 27 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து