/* */

சுயேட்சையாக போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர்: வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைவு

சுயேட்சையாக போட்டியிட்ட யூனியன் கவுன்சிலர் வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைத்து கொண்டார்.

HIGHLIGHTS

சுயேட்சையாக போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர்: வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைவு
X

நெல்லையில் சுயேட்சையாக போட்டியிட்ட யூனியன் கவுன்சிலரான ஐஏஎஸ் அதிகாரியின் சகோதரி. வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைத்து கொண்டார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இளைஞர்கள் உள்பட புது முக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். அந்த வகையில் நெல்லையில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியின் சகோதரி ஒருவர் யூனியன் கவுன்சிலராக வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அதாவது நெல்லை மானூர் யூனியனுக்கு உட்பட்ட 5-வது வார்டில் தி.மு.க, பா.ஜ.க, அ.ம.மு.க என அரசியல் பிரதான கட்சிகளும், இரு சுயேச்சைகளும் போட்டியிட்டனர். அதன்படி உமாதேவி என்ற சுயேச்சை வேட்பாளரும் 5வது வார்டில் களமிறங்கினார்.

இவர் இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரின் உடன் பிறந்த சகோதரி ஆவார். 2011 பேட்ஜ்ஜில் ஐஏஎஸ் வெற்றி பெற்ற உமாசங்கர் தற்போது கல்கத்தாவில் சுங்க ஆணையராக பணிபுரிந்து வருகிறார். உமாதேவி மேல இலந்தைக்குளம், பன்னீரூத்து, சுண்டங்குறிச்சி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வார்டில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட போது உமாதேவி 2,219 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரான முருகேஸ்வரியை விட 1000 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.

இது குறித்து உமாதேவி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- நான் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெற்றோர் விவசாயக் கூலி வேலை செய்து எங்களைப் படிக்க வைத்தனர். என் அண்ணனை ஐ.ஏ.எஸ் ஆக்கியிருக்கிறார்கள். நான் பன்னாட்டு நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தேன். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் இரண்டு முறை தேர்வெழுதி தோல்வி அடைந்து விட்டேன்.

எங்களுடைய பகுதி எந்த அடிப்படை வசதிகளையும் யாரும் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வந்த போது மக்களுக்கு உதவும் வகையில் போட்டியிட தீர்மானித்தேன். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதால் வெற்றியைச் சுலபமாக எட்டிப் பிடிக்க முடியாது என்பது புரிந்தது. அதனால் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் அவர்கள் அரசு வேலைக்குச் செல்லும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன் என தெரிவித்தார்.

இதற்கிடையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் உமாதேவி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் நல்ல திட்டங்களை பார்த்து திமுகவில் இணைந்து கொண்டதாக தெரிவித்தார். இரண்டு முயற்சியில் உமாதேவியின் ஐஏஎஸ் கனவு பறிபோனாலும், ஒரே முயற்சியில் யூனியன் கவுன்சிலர் பதவியை கைவசப்படுத்தியிருப்பது சாதனையாக பார்க்கப்பட்டாலும், கூட வெற்றி பெற்ற மறுநாளே அவர் ஆளுங்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டது வாக்காளர்களை முகம் சுளிக்க செய்துள்ளது.

Updated On: 13 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!