/* */

விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

அடை மிதிப்பான் குளம் குவாரியில் விபத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
X

நெல்லை முழுவதும் விதி மீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று சபாநாயகர், அமைச்சர், அதிகாரிகள் கூட்டாக பேட்டியளித்தனர்.

நெல்லையில் விபத்து ஏற்படுத்திய கல்குவாரி சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது குவாரி உரிமையாளர்கள் இரண்டு பேர் தலைமறைவாகி விட்டனர். நெல்லை முழுவதும் விதி மீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று நெல்லையில் சபாநாயகர் அமைச்சர் அதிகாரிகள் கூட்டாக பேட்டியளித்தனர்.

நெல்லை மாவட்டம் தருவை அடுத்த அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வரா என்ற தனியார் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது இதில் முருகன், செல்வம், விஜய் ஆகிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், செல்வம் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் மற்றொரு முருகன் ஆகிய 3 பேரின் கதி என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காவல்துறை இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குவாரியின் உரிமதாரரான சங்கர நாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் குவாரியின் உரிமையாளர் செல்வராஜ் அவரது மகன் குமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய குற்றவாளியான செல்வராஜ் அவரது மகன் இருவரும் கைது செய்யப்படாமல் இருப்பது சர்ச்சையை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்வராஜ் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பதாலயே அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில் அவர்கள் இருவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குவாரி விபத்து தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கனிமவளத் துறை இயக்குனர் நிர்மல் ராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. சம்பந்தப்பட்ட குவாரி சங்கரநாராயணன் என்பவர் பெயரில் 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் 2236.5 ஹெக்டேர் பரப்பளவில் குவாரி செயல்பட்டு வருகிறது 6 பேர் விபத்தில் சிக்கிய நிலையில் விபத்து நடைபெற்ற 6 மணி நேரத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் பெரிய பாறை சரிந்து விழுந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது விதி மீறல் இருந்தால் குவாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த உரிமம் 2023 வரை இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் அள்ளப்படுவதால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த குவாரிக்கு கனிமவளத் துறை உதவி இயக்குனர் தடை விதித்தார். எனவே தடையை மீறி சட்டத்திற்குப் புறம்பாக இந்த குவாரி செயல்படுகிறது. குவாரிக்கு சொந்தக்காரரான செல்வராஜ் அவரது மகன் குமார் இருவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது 304, 304a ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவாரி சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டது குறித்து ஆர்டிஓ தனியாக புகார் அளித்து அதற்கேற்ப கூடுதலாக வழக்கு மாற்றப்படும் இனி இதுபோன்று விபத்து ஏற்படாமல் இருக்க நெல்லையில் அனைத்து குவாரிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகள் இருந்த நிலையில் 3 குவாரிகள் செயல்படவில்லை. கடந்த ஆறு மாதங்களில் நெல்லையில் ஆறு குவாரிகள் மூடப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகள் மீது அபாரதம் விதித்துள்ளோம். வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் ஏற்றி செல்ல தடை விதிக்க முடியாது. உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது ஒரு விபத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். 3 பேர் மீட்கப்பட்டது தவிர ராஜேந்திரன் (42), முருகன் (25), செல்வகுமார்(30) ஆகிய மூவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

Updated On: 16 May 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  3. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  4. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  5. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  7. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  10. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...