/* */

கரடி கடித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தி.மு.க. மாவட்ட செயலாளர்

DMK News Tamil -தென்காசி அருகே கரடி கடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

கரடி கடித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தி.மு.க. மாவட்ட செயலாளர்
X

கரடி கடித்து காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து நிதி உதவி வழங்கினார் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன்.

DMK News Tamil -தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலத்தில் நேற்று காலை கரடி ஒன்று மசாலா வியாபாரி மற்றும் விவசாயிகள் என மூன்று பேரை கடித்து தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அந்த மூன்று பேரையும் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று இரவு அந்த கரடியை வனத்துறை, காவல்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்வனப் பகுதியில் கொண்டு விட்டனர்.

இந்நிலையில் தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நேற்று கரடி கடித்ததால் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ உதவி தொகை வழங்கினார். அப்போது அவருடன் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சென்று இருந்தனர்

இந்த நிகழ்வின் போது ஒவ்வொருவருக்கும் தலா 15000 ரூபாய் வீதம் மொத்தம் 45000 ரூபாய் மருத்துவ உதவி தொகையை மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் வழங்கினார்.

காயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் நிவாரண தொகை பெற்றுத் தரப்படும் என மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கரடி தாக்கியதால் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார். சந்திப்பிற்கு முன்னதாகவே துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சிவபத்மநாதன் பேசினார்.

உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான முழு உதவியும் மாவட்ட தி.மு.க* சார்பில் பெற்று தரப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று நேற்று மூன்று நபர்களை கொடூரமாக தாக்கியது. இதில் மூன்று நபர்களின் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு முதலுதவிக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பெத்தான் பிள்ளை குடியிருப்பு நாகேந்திரன், சைலப்பன் மற்றும் கருத்தலிங்கபுரம் வைகுண்ட மணி ஆகியோர் கரடி தாக்கியதில் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கும் மாவட்ட திமுக சார்பில் ஆறுதல் கூறப்பட்டு உள்ளது. நிகழ்வின் போது நாகேந்திரன் மகன் சங்கரநாராயணன், சைலப்பன் மகன்கள் பாஸ்கர் , மணிகண்டன், வைகுண்ட மணி மகள் அம்பலம் , மாரியப்பன், பொன் மோகன் , மாயாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்