/* */

நெல்லை: காவலர் குடும்பத்தினரிடம் குறை கேட்டறிந்த டிஜிபி சைலேந்திரபாபு

நெல்லை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்களின் குடும்பத்தினரிடம் பேசினார்.

HIGHLIGHTS

நெல்லை: காவலர் குடும்பத்தினரிடம் குறை கேட்டறிந்த டிஜிபி சைலேந்திரபாபு
X

நெல்லை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை நேற்றிரவு ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, நேற்று மாலை நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று காவல் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை நேற்றிரவு ஆய்வு செய்த அவர், காவலர்களின் குடும்பத்தினர் குறைகளையும் மற்றும் காவலர்களின் குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக அக்கறையுடன் விசாரித்தார்.

அப்போது, தென்மண்டல காவல் துறைத்தலைவர் அன்பு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் சுரேஷ்குமார், குற்றம் மற்றும் போக்குவரத்து மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 26 Sep 2021 12:30 AM GMT

Related News