/* */

நெல்லையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 7 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு

நெல்லையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் ரோடு ரோலரை கொண்டு அழித்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 7 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு
X

நெல்லையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் ரோடு ரோலரை கொண்டு அழித்தனர்.

நெல்லையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் ரோடு ரோலரை கொண்டு அழித்தனர் இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் கள்ளசந்தையில் மது விற்கும்போது பறிமுதல் செய்யப்பட்டவையாகும்.

நெல்லை மாநகர மதுவிலக்கு போலீசார் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க அவ்வப்போது ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில் கடந்த ஓராண்டில் நெல்லை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரில் உள்ள காலி இடத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டது.

நெல்லை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, நெல்லை கலால் தாசில்தார் தாஸ் பிரியன் ஆகியோர் முன்னிலையில் மது பாட்டில்களை மொத்தமாக தரையில் அடுக்கி வைக்கப்பட்டு, பின்னர் ரோடு ரோலரை கொண்டு அளிக்கப்பட்டன. மொத்தம் ஒரே நேரத்தில் 7635 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் 13 லட்சம் ரூபாய் ஆகும்.

Updated On: 23 Sep 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு