வாக்காளர் பட்டியலில் பெயர், பாலினம் பதிவில் குழப்பம்: வேட்பாளர் தவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்யும் வரை மதவக்குறிச்சி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்க வேண்டும்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வாக்காளர் பட்டியலில் பெயர், பாலினம் பதிவில் குழப்பம்:  வேட்பாளர் தவிப்பு
X

உள்ளாட்சி தேர்தலுக்காக அறிவித்த வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் பதிவு செய்திருந்ததால் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்ய முடியாமல் தவித்த வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தனது பெயரில் திருத்தம் செய்யும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க நீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நெல்லை உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்றது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த சூழ்நிலையில் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் குளறுபடி காரணமாக வேட்பு மனுவை ஏற்க மறுத்த காரணத்தால் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி மனு அளிக்க வந்த வேட்பாளரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மானூரை சேர்ந்த பத்திர எழுத்தாளரான ராமகிருஷ்ணன் என்பவர் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதவக்குறிச்சி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்ய முயன்றார். அப்போது வாக்காளர் பட்டியலில் பாகம் வரிசையில் ராமகிருஷ்ணன் பெயர் இடம்பெற வேண்டிய இடத்தில் அவரது மனைவி கனகம்மாளின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மனைவி பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ராமகிருஷ்ணன் பெயர் இடம் பெற்றுள்ளதால் வேட்பு மனுவை வாங்க அலுவலர்கள் மறுத்துள்ளனர்.

மேலும், ராமகிருஷ்ணனின் வாக்காளர் அடையாள அட்டையிலும் பாலினம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் கிராமத்தில் தொடர்ச்சியாக போட்டியிடும் சிலர் வேண்டுமென்று தனக்கு சதி செய்துவிட்டதாக கூறி ராமகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் தனது வழக்கறிஞர் மூலம் ஆட்சியருக்கு மெயிலில் புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் திருத்தம் செய்யும் வரை மதவக்குறிச்சி கிராமத்தில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்தப்பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 22 Sep 2021 6:15 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா
 2. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் 23ம் தேதி 54 பேருக்கு கொரோனா
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் 23ம் தேதி 2 பேருக்கு கொரோனா
 4. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 6. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 7. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 8. சிவகங்கை
  சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி 11 பேருக்கு கொரோனா
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 23ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி