/* */

நெல்லை திமுக உட்கட்சி வேட்புமனுவில் இருதரப்பினர் கைகலப்பு: காவலர் காயம்

நெல்லையில் திமுக கட்சியின் உட்கட்சி தேர்தலையோட்டி வேட்பு மனு பெறப்பட்டதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை திமுக உட்கட்சி வேட்புமனுவில் இருதரப்பினர் கைகலப்பு: காவலர் காயம்
X

வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த தொண்டர்களை அப்புறப்படுத்தும் காவல்துறையினர்.

திமுக உட்கட்சித் தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டத்திற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் செயலாளர்கள் மற்றும் பகுதி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதன் தேர்தல் அலுவலராக கண்ணதாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் சாப்பிட கிளம்பும் போது அங்கு வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜாவின் கோஷ்டிக்கும், எதிர் தரப்பை சேர்ந்த பிரபு கோஷ்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அது கைகலப்பாக மாறியது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த உலகு சங்கர் காவலருக்கு தள்ளுமுள்ளில் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தொண்டர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக உட்கட்சித் தேர்தல் மோதல் நெல்லை திமுகவினர் இடையே ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த தொண்டர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 29 April 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?