/* */

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து: நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கோரிக்கை

மேலப்பாளையத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை.

HIGHLIGHTS

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து: நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கோரிக்கை
X

மேலப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. 

நெல்லை மாநகரத்தில் சுற்றி திரிந்து விபத்துகளை ஏற்படுத்தும் கட்டுக்கடங்காத ‌கால்நடைகளை பிடிக்க எஸ்டிபிஐ கட்சி சார்பாக கோரிக்கை.

நெல்லையை அடுத்த மேலப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. மேலப்பாளையம் பெரியதெரு அருகே சாலையில் திரிந்த மாடு ஒன்று பெரியவரை முட்டியதில் அவர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்டிபிஐ கட்சி மேலப்பாளையம் மேற்கு பகுதி செயலாளர் காதர் மீரான் சம்மந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தார.

மாநகராட்சி முழுவதும் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், மாடுகளை பிடிக்க கூடுதலான வாகனத்தையும், பணியாளர்களையும் நியமிக்க வேண்டும், மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அதிகப்படியான அபராதங்கள் விதிக்கவேண்டும் , உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தினர்.

Updated On: 30 Nov 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்