/* */

திருமலை காேவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்பு பணி தீவிரம்

திருமலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளம் காரணமாக கீழே வர முடியாமல் தவிப்பு. மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்.

HIGHLIGHTS

திருமலை காேவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்பு பணி தீவிரம்
X

திருமலை நம்பி கோவிலில் வெள்ளம் காரணமாக சிக்கி தவித்த பக்தர்களை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் காவலர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு புரட்டாசி கடைசி சனி கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் வெள்ளம் காரணமாக பக்தர்கள் சிக்கி தவிப்பு. தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் காவலர்கள் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறை ஆரம்பித்தால் நேற்று முன் தினம் பக்தர்கள் கோவிலுக்கு செல்லுவதற்கு அனுமதி வழங்கியது.

இன்நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

கடந்த சில தினங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் தொடர்ந்த மழை பெய்து வருகிறது. இன்று காலை வழக்கிற்கு அதிகமாக மழை பெய்து வருவதால் அதிகாலை மலை நம்பிகோவிலுக்கு சென்ற பக்தர்கள் இப்பகுதி நம்பியாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரை பாலம் முழுவதும் முழ்கியது. இதனால் கோவிலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பகுதிக்கு தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 16 Oct 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்