/* */

நெல்லையில் பைக்- கார் மோதி விபத்து: 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ரெட்டியார்பட்டி நான்குவழி சாலையில் பைக்-கார் மோதிய விபத்தில் இரண்டு மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

HIGHLIGHTS

நெல்லையில் பைக்- கார் மோதி விபத்து: 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
X

ரெட்டியார்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

நெல்லையில் பரிதாபம்; ரெட்டியார்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு எம்பிபிஎஸ் மாணவிகள் உள்பட மூவர் பலி; மேலும் ஒரு மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவ்ய பாலா (21), பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் கிராமத்தை சேர்ந்த திவ்ய காயத்ரி (21) மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரிட்டோ ஏஞ்சலின் ராணி (22) ஆகிய மாணவிகள் 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் கேடிசி நகரில் இருந்து ரெட்டியார்பட்டி நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது இரட்டை மலை அருகே சென்ற போது எதிர் திசையில் நாகர்கோவிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் ஒன்று திடீரென டயர் வெடித்து மறுபக்கம் சாலைக்கு நிலைதடுமாறி சென்று விபத்துக்குள்ளானது. அப்போது மறுபக்கம் சாலையில் சென்ற மாணவிகளின் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ மாணவிகள் திவ்ய காயத்ரி மற்றும் பிரிடோ ஏஞ்சலின் ராணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மாணவி திவ்ய பாலா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதேபோல் காரில் வந்த சண்முகசுந்தரம் மற்றும் கார் ஓட்டுனர் சந்தோஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மாணவி திவ்யா பாலா மற்றும் காரில் வந்த சந்தோஷ் உட்பட 4 பேரும் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே காரில் வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்தார். தொடர்ந்து மாணவி திவ்யா பாலா மற்றும் காரில் வந்த சந்தோசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாநகர காவல்துணை ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகள் 3 பேரும் கல்லூரியில் இருந்து ரெட்டியார்பட்டியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் டயர் வெடித்து பைக் மீது மோதிய விபத்தில் மருத்துவ மாணவிகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 Dec 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்