/* */

SDAT Tamilnadu-விளையாட்டு விடுதியில் சேர விருப்பமா? இவ்ளோ ஈஸியா?

SDAT Tamilnadu- விளையாட்டு விடுதியில் சேர விருப்பப் படுபவர்களுக்கு விண்ணப்பிக்க உதவும் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

SDAT Tamilnadu-விளையாட்டு விடுதியில் சேர விருப்பமா? இவ்ளோ ஈஸியா?
X

SDAT Tamilnadu-கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்புவர்களாக இருப்பவர்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்புதான் இந்த விளையாட்டு விடுதி. அறிவியல் பூர்வமான பயிற்சிகளும் தங்குமிடங்களும் சத்தான உணவுகளும் கொடுத்த தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கீழ் இந்த விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து, பளுதூக்குதல், வாள்வீச்சு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த சிறப்பு விளையாட்டு விடுதியும் ஹாக்கி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் செயல்பட்டு வருகின்றன.

தடகளம், குத்துச்சண்டை, கைப்பந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜூடோ மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி வேலூர் காட்பாடியிலும் அமைந்துள்ளன.

சேர வயது தகுதி உண்டா?

ஆம் இந்த பயிற்சி விடுதியில் சேர வயது தகுதி கண்டிப்பாக உண்டு. 1-1-2023 ம் தேதி அன்று 17 வயது நிரம்பி, 12ம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்று கல்லூரியில் இளநிலை, முதுகலை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

மற்ற தகுதிகள்

தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் தமிழக அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் ஏதேனும் ஒரு போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

இல்லையெனில் தமிழ்நாடு மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விளையாட்டில் சிறந்த விளங்க ஆர்வமிருக்கும் வீரர்கள் மாணவர்கள் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே வருகிற மே 2ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு 95140 00777 தொடர்பு கொள்ளுங்கள்.

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3-ந் தேதி காலை 7 மணியளவில் சென்னை பெரியமேடு ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பெரியமேடு ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை எழும்பூர் எம்.ஆர்.கே. ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடக்கிறது. எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 4:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...