/* */

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்

நெல்லை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை

HIGHLIGHTS

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம்  முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்
X

திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் , இடையூறு செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்ட நெல் ,தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு tncsc-epdc.in என்ற முகவரியில் இணையதளம் மற்றும் இ.சேவை மையங்களின் மூலமாக சிட்டா, அடங்கல் வங்கி சேமிப்பு கணக்கு சாகுபடி செய்யப்பட்ட பரப்பு மற்றும் அறுவடை செய்யப்பட்ட நெல் அளவு ஆகிய விபரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதனை பரிசீலனை செய்த பிறகு டோக்கன் எண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் மேற்படி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான தேதி குறிப்பிட்டு குறுஞ்செய்தி சம்மந்தப்பட்ட விவசாயிகள் செல்பேசி எண்ணுக்கு வந்து சேரும் குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட தேதியில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைப்பு செய்தவுடன் நெல்லுக்குரிய தொகை சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தாங்களே உற்பத்தி செய்த நெல்லினை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நேரடியாக கொண்டு வரலாம். விவசாயிகள் எவ்விதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நேரடி கொள்முதல் நிலையத்தில் இடையுறுகள் ஏதும் ஏற்படின் மற்றும் விபரங்கள் தேவைப்படின் கீழ்கண்ட எண்களுக்கு செல்பேசி மூலமும்,வாட்ஸ்அப் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம்.

1.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக கட்டுப்பாட்டு அறை எண் : 9840874237

2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணைமண்டல மேலாளர் எண் : 9994530724

3. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் : 9342471314

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 24 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :