/* */

மத்திய அரசின் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் 2021 -திருநெல்வேலி கலெக்டர்

மத்திய அரசின் 'ஜீவன் ரக்‌ஷா' விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, திருநெல்வேலி கலெக்டர் வே.விஷ்ணு அறிக்கை.

HIGHLIGHTS

மத்திய அரசின் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் 2021 -திருநெல்வேலி கலெக்டர்
X

திருநெல்வேலி கலெக்டர் 

மத்திய அரசின், 'ஜீவன் ரக்‌ஷா' விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, திருநெல்வேலி கலெக்டர் வே.விஷ்ணு கூறியுள்ளதாவது.

நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின் விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதலில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு, மத்திய அரசு சார்பில், ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம், மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பவர்களை, வீரமுடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை, போராடி மீட்பவர்களுக்கும், தனக்கு காயம் ஏற்பட்டாலும், வீரத்துடன் போராடி உயிரை காப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி, 2021 ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள், தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரி, www.sdat.tn.gov.in மூலம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2021 ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகம் அண்ணா விளையாட்டு அரங்கம் செயின்ட் தாமஸ் ரோடு திருநெல்வேலி 627 002 என்ற முகவரிக்கு வரும் 06-08-2021 ஆம் தேதிக்கு முன்னர் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலக எண் 0462 257 2632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின் விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதலில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு, மத்திய அரசு சார்பில், ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகின்றன. உயிர் காக்கும் மனிதத்தன்மை மிகுந்த தீரச்செயலை செய்தவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம், உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம், ஜீவன் ரக்‌ஷா பதக்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் இது வழங்கப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த பின்னரும் அவரது நற்செயலுக்காக இந்த விருது வழங்கப்படலாம்.

Updated On: 20 July 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?