Begin typing your search above and press return to search.
கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை.
HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு 01.05.2022 முதல் 28.08.2022 வரை 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்குகல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 2756.62 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும். இவ்வாறு அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.